சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர் ஆகியோருக்கு பொதுமக்கள் – போலீஸ் நல்லுறவு குறித்து நெல்லை சரக டிஐஜி அறிவுரை.
சாத்தான்குளத்தில் வணிகர்களாக தந்தை மகன் இருவர் காவல்துறையால் மரணமடைந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசாரின் தவறான அணுகுமுறை தான் இச்சம்பவத்திற்கு காரணம் எனவும் பரவலாக பொதுமக்கள் போலீசாரால் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக கூறப்பட்டன.
அதைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காவல்துறை ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்கேற்ற நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார் கலந்து கொண்டு பேசுகையில்,
போலீசார் பொது மக்களுடனான நல்லுறவை எவ்வாறு வளர்த்துக் கொள்வது, புகார் அளிக்க வரும் நபர்களை எப்படி அணுகுவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளுடன் அறிவுரை வழங்கினார். மேலும், கொரோனா தடுப்பு ஊரடங்கு காலத்தில் காவல் துறை அதிகாரிகள் பொதுமக்களை அணுகும்போது சந்திக்கும் பிர்ச்சினைகளை கேட்டறிந்ததோடு பிரச்சினைகைள அணுகுவதற்கான யுக்திகள் குறித்தும் பேசினார்.
இதில் குமரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள 100 க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
0 Comments