குழந்தை திருமணம் விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய ஸ்டிக்கரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்…!

குழந்தை திருமணம் விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய ஸ்டிக்கரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்…!

in News / Local

குமரி மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு சுவர் ஒட்டிகள் ஒட்ட மாவட்ட சமூக நல்வாழ்வு துறை சார்பில் முகாம் நடைபெற்றது. இதில் குழந்தை திருமணம் விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய ஸ்டிக்கரை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டார். ஸ்டிக்கரை மாவட்ட குழந்தை திருமண தடுப்பு அலுவலர் சரோஜினி பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசியதாவது:

இந்திய குழந்தை திருமண தடைச் சட்டம் 2006 ன் படி பெண்ணின் திருமண வயது 18 பூர்த்தியடைய வேண்டும். இந்த வயதிற்கு முன் நடைபெறும் திருமணம் செல்லாது. மேலும் இது குற்ற செயல் ஆகும். குழந்தை திருமணம் செய்யும் மணமகன் மற்றும் திருமணத்தில் தொடர்புடையவர்கள் அனைவரும் தண்டனைக்குறிய குற்றம் செய்தவர்.

திருமணத்தில் ஈடுபட்டவர்களுக்கு இரண்டு வருடம் சிறை தண்டனையும் ஒரு லட்சம் அபராதம் வழங்கப்படலாம். பொதுமக்கள் குழந்தை திருமணத்தை தடுக்க சமூக நல அலுவலரையும், சைல்டுலைன் 1098 க்கும் தொடர்பு கொள்ளலாம். சமூக நலக் கூட பொறுப்பாளர்கள் திருமணத்திற்கு பதிவு செய்யும் போது மணமக்களின் வயது சாற்றிதழை சரி பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top