மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நாளை நடக்கிறது!

மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நாளை நடக்கிறது!

in News / Local

குமரி மாவட்ட சிலம்பாட்ட கழக மாவட்ட செயலாளர் சரவண சுப்பையா விடுத்துள்ள அறிக்கை : வி.ஐ.பி ஹெல்த் சென்டரும், மாவட்ட சிலம்பாட்ட கழகமும் இணைந்து மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நாளை (1ம் தேதி) வி.ஐ.பி ஜிம்மில் நடத்துகின்றன.

போட்டிகள் சப்ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என 4 பிரிவுகளாக நடக்கிறது. 11வயது முதல் 14 வயது வரை சப்ஜினியருக்கும், 15வயது முதல் 17 வயது வரை ஜூனியருக்கும், 18 வயது முதல் 25 வயது வரை சீனியருக்கும், 25 வயது முதல் 30 வயது வரை சூப் பர் சீனியருக்கும் போட்டிகள் நடக்கிறது. வீரர்கள் தங்களது 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும், அசல் வயது சான்றிதழும் கொண்டு வர வேண்டும். நுழைவு கட்டணம் கிடை யாது. வீரர்கள் உடல் எடை 1ம் தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை பரிசோதிக் கப்படும். போட்டியில் முதல் பரிசு பெறும் வீரர் கள் நெல்லையில் வருகிற 27, 28, 29 ஆகிய நாட்களில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top