தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு!

in News / Local

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் போனஸ் விவரங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, போக்குவரத்து கழகம், மின்வாரியம் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும்.

வீட்டு வசதி வாரியம், குடிநீர் வழங்கல், கழிவு நீரகற்று வாரிய ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும். பிற கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ் வழங்கப்படும். நிறுவனங்கள் ஒதுக்கும் உபரித்தொகைக்கு ஏற்ப 20% அல்லது 10% போனஸ் வழங்கப்படும்.

இதனால், நிரந்தர தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,400 மற்றும் அதிகபட்சம் ரூ.16,800 தீபாவளி போனஸ் வழங்கப்படும். போனஸ் வழங்குவதன் மூலம் அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் 3,48,503 பேர் பயன் அடைவார்கள்.

பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணை தொகை 11.37% வழங்கப்படும். லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கு உபரி தொகையை கணக்கில் கொண்டு 20% போனஸ் தரப்படும். நஷ்டம் அடைந்துள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top