தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந் தேதி குமாரி வருகை!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந் தேதி குமாரி வருகை!

in News / Local

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியின் 40 நாடாளுமன்ற தொகுதிகளின் வேட்பாளர்கள் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரசாரம் செய்து வருகிறார்.

இதேபோல் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளரான எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ.வை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந் தேதி (திங்கட்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார்.

பின்னர் அன்று மாலை 5 மணி அளவில் நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெறும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு, காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாருக்கு ‘கை’ சின்னத்தில் வாக்குகள் கேட்டு உரையாற்றுகிறார்.

எனவே மு.க.ஸ்டாலினின் எழுச்சி உரையை கேட்க தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைத்து நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top