குமரியில்  நான்கு வழி சாலை அமைய திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசுகளே காரணம்:முன்னாள் எம்.பி அறிக்கை

குமரியில் நான்கு வழி சாலை அமைய திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசுகளே காரணம்:முன்னாள் எம்.பி அறிக்கை

in News / Local

குமரி மாவட்டத்தில் மூன்று பக்கமாக நான்கு வழி சாலை மற்றும் புறவழிச்சாலை பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் பாலங்கள் தேவையில்லை. குமரி மாவட்டத்தில் அமைந்து கொண்டிருக்கும் 4 வழி சாலைகள் பிற்காலத்தில் 6 வழி சாலையாக மாற்றும் அளவிற்கான இடவசதியோடு திட்டமிட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என கன்னியாகுமரி மாவட்டத்தின் முன்னாள் எம்.பி ஹெலன் டேவிட்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2009ம் ஆண்டு மார்த்தாண்டம் மற்றும் வடசேரி பகுதிகளில் மேம்பாலம் அமைக்க முயற்சி செய்தேன். அதிகாரிகள் பல தரப்பட்ட ஆய்வு செய்த பிறகு சாலையின் இருபக்கமும் 15 அடி நிலம் கையகப்படுத்தினால் மட்டுமே பாலம் அமைக்க முடியும் என்று கூறினர். அதனால் மார்த்தாண்டம் மேம்பால திட்டத்தை தவிர்த்துவிட்டு, நான்கு வழி சாலைக்காக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை ஏற்று 2009-ல் இருந்து குமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலை அளவீடு பணிகள் மற்றும் இழப்பீடு தொகை கணக்கெடுத்தல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. மத்திய அரசின் கெஜட்டில் நிலம் கையகப்படுத்தப்பட்ட ஆணை வெளியிட்டு 2 முறை டென்டர் விடப்பட்டது. மூன்றாவது முறை டென்டர் விடும் சமயத்தில் பதவி காலம் நிறைவு பெற்றது.

தொடர்ந்து நான்கு வழி சாலைக்கு பணிகள் நடைபெற்று வருகிறது. எனது ஐந்தாண்டு பாராளுமன்ற பணியின் தொடர் முயற்சி காரணமாக இந்த திட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் நாகர்கோவில் - திருவனந்தபுரம், நாகர்கோவில் - கன்னியாகுமரி, நாகர்கோவில் - காவல்கிணறு ஆகிய பகுதிகளை இணைக்கின்ற சாலை பணிகள் விரைந்து குமரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சாதனைக்கு காரணம் திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளே ஆகும். மார்த்தாண்டம் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் இரும்பு பாலம் பொதுமக்களையும், வியாபாரிகளின் எந்த இடத்தையும் எடுக்காமல் மேம்பாலம் அமைப்போம் என்று நம்ப வைத்து ஏமாற்றிய மேம்பாலம் ஆகும். மத்திய அரசுக்கு வேண்டிய கார்பரேட் நிறுவனத்திற்கு வேலை வழங்குவதற்கு திட்டமிட்டு குமரி மாவட்ட மக்களிடம் திணிக்கப்பட்ட பாலம்தான் இந்த இரும்பு பாலம் ஆகும்.

குமரி மாவட்டத்தில் மூன்று பக்கமாக நான்கு வழி சாலை மற்றும் புறவழிச்சாலை பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் பாலங்கள் தேவையில்லை. குமரி மாவட்டத்தில் அமைந்து கொண்டிருக்கும் 4 வழி சாலைகள் பிற்காலத்தில் 6 வழி சாலையாக மாற்றும் அளவிற்கான இடவசதியோடு திட்டமிட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே குமரி மாவட்டத்தில் போக்குவரத்து நெருக்கடி என்ற நிலை என்றும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top