தி.மு.க எப்போதுமே இந்துகளுக்கு எதிரான கட்சி தான் ..கன்னியாகுமரியில் விஎச்பி தலைவர் வேதாந்தம் பேச்சு

தி.மு.க எப்போதுமே இந்துகளுக்கு எதிரான கட்சி தான் ..கன்னியாகுமரியில் விஎச்பி தலைவர் வேதாந்தம் பேச்சு

in News / Local

திமுக எப்போதுமே இந்துதளுக்கு எதிரான கட்சி தான் என விஎச்பி தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி சன்னதிதெருவில் உள்ள வேதபாடசாலையில் கடந்த 1983 கங்கையில் இருந்து கன்னியாகுமரிக்கு கொண்டுவரப்பட்ட புனிதகங்கை கலசம் மற்றும் பாரதமாதா,கங்கை மாதா சிலையை திறந்து வைத்த விஎச்பி தலைவர் வேதாந்தம் நிருபர்களிடம் கூறியதாவது ;

இந்த நாட்டில் 80 சதவீதத்திற்கும் அதிகமான இந்துக்கள் வாழ்கின்றனர்.அனைத்து மதத்தினரின் உணர்வுகளை மதித்து வாழும் இந்துகளின் சொத்துகளையும்,இடங்களையும் பிறமதத்தினர் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்துவருகின்றனர்.ஆனால் கோயில் சொத்துகளை பாதுகாக்கவேண்டிய இந்துசமய அறநிலையத்துறை வேடிக்கை பார்க்கிறது.வேளாண்மை சட்ட மசோதாவை சரியாகபுரிந்து கொள்ளாத அரசியல் கட்சிகள் தங்களின் சொந்த தேவைக்காக விவசாயிகளிடம் அரசியல் ஆக்குகிறது.இதனால் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை நாடுமுழுவதும் கொண்டுசென்று விற்பனை செய்யமுடியும்.இதுபற்றி மத்திய நிதிஅமைச்சர் நிர்மலாசீதாராமன் தெளிவாக விளக்கியுள்ளார்.பெரியவெங்காயத்தின் விலை விரைவில்குறையும்.

நடிகை குஷ்பு மக்களிடம் செல்வாக்குள்ள நடிகை.இவர் திமுக.,காங்கிரஸ் போன்ற இயக்கங்களில் இருந்தாலும்,தன்னுடைய லட்சியத்திற்கு ஏற்ற இயக்கமாக பாஜக வை தேர்தெடுத்துள்ளார்கள்.பிரதமர் மோடியின் தலைமையால் ஈர்க்கப்பட்டு பாஜக வில் இணைந்துள்ளார்.குஷ்புவின் வருகை தமிழக பாஜகவிற்கு பலமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் திமுக வின் செயல்பாடுகள் இந்துக்களுக்கு எதிராகவே இருந்துவருகிறது.திமுக தனது இந்துவிரோத போக்கை திருத்திகொள்ளாவிட்டால் மக்கள் திமுக வை திருத்துவார்கள்.அனைத்து மதத்திற்கும் திமுக சமமாக இருக்கவேண்டும்.மற்றமத நிகழ்ச்சிகளில் அவர்களை புகழ்வது தவறல்ல.அதேநிகழ்ச்சியில் இந்துகளை,இந்துநிகழ்ச்சிகளை கொச்சைபடுத்துவது தவறு.திமுக எப்போதுமே இந்துகளுக்கு எதிரான கட்சி தான்.

கிராமபுற மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீடு பிரச்சினையில் கல்விதுறையின் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து மக்களுக்கு எதுநன்மையோ அதற்கு ஏற்றாற்போல் கவர்னர் நல்ல முடிவு எடுப்பார்.நிகழ்ச்சியில் விஎச்பி நிர்வாகிகள் மணி,ரவீந்திரன்,கிரிஜாஷேஷாத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top