திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார், பிறந்தநாளன்று உயிர்பிரிந்தது!

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார், பிறந்தநாளன்று உயிர்பிரிந்தது!

in News / Local

சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் காலமானார். அவருக்கு வயது 62.

உடல்நலக் குறைவு காரணமாக குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் கடந்த 2-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருந்தது சோதனை மூலம் கண்டறியப்பட்டது.

மேலும், அவருக்கு தொடர்ந்து மூச்சுத்திணறல் அதிகரித்ததன் காரணமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரை காப்பாற்ற முடியவில்லை.

சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், திமுக எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகனுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவை அடுத்து கடந்த 2-ம் தேதி குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுநீரகத்தில் சிறிய பிரச்சனையும், கொரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டதுடன் மருத்துவர்கள் குழு தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டது.

ஜெ.அன்பழகனுக்கு மூச்சுத்திணறல் அதிகரித்த காரணத்தால் அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு ஆகிஸிஜன் அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரது உடல் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லாததால் நிலைமை கவலைக்கிடமானது. இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து ரேலா மருத்துவமனை நிர்வாகம் நேற்று முன் தினம் மாலை மருத்துவ அறிக்கை வெளியிட்டு அதில் அன்பழகனின் உடல்நிலையில் மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்திருந்தது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top