தனியார் மருத்துவமனைகளில் தேவையில்லாமல் படுக்கைகளை நிரப்ப வேண்டாம்.!கொரோனா நோயாளிகளுக்கு குமரி ஆட்சியர் அட்வைஸ்.!

தனியார் மருத்துவமனைகளில் தேவையில்லாமல் படுக்கைகளை நிரப்ப வேண்டாம்.!கொரோனா நோயாளிகளுக்கு குமரி ஆட்சியர் அட்வைஸ்.!

in News / Local

குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இன்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ குழுவினருடன் கலந்தாய்வு மேற்கொண்டார் .

தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; தற்போது தமிழ்நாட்டில் கொரோனா தொற்று முதலாவது அலையைவிட இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்பு அடைவது சற்று வேகமாக உள்ளது .கன்னியாகுமரி மாவட்டத்திலும் இதன் தாக்கம் தற்போது அதிகப்படியாக உள்ளது .

மற்ற மாவட்டங்களை காட்டிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை காட்டிலும் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு அதிகமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் அறிகுறி இல்லாதவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை செய்து கொள்ளலாம் .

தனியார் மருத்துவமனைகளில் தான் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளலாம் .கோவிட் பராமரிப்பு வாயிலாகவும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .தொற்றால் பாதிக்கப்பட்ட வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கடந்த இரண்டு வாரங்களாகவே தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவை அதிகமாக உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் தினமும் சிகிச்சை மேற் கொள்பவர்களின் தேவைக்கேற்ப ஆக்ஸிஜன் வந்து கொண்டிருக்கிறது. மேலும் தடுப்பூசி நமது குமரி மாவட்டத்திற்கு தினந்தோறும் 3500 டோஸ் வந்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு உடனடியாக ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. எனவே தனியார் மருத்துவமனைகளில் தேவை இல்லாமல் படுக்கைகளை நிரப்ப வேண்டாம்.

தற்போது தமிழக அரசு நாளை முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்த ஆணையிட்டுள்ளது .இதனால் குறைவான தொட்டால் பாதிக்கப்பட்டவர்களின் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top