போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பேரூராட்சி ஊழியர்!

போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பேரூராட்சி ஊழியர்!

in News / Local

நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியை சேர்ந்த வர்ததேயு ஷிபு(38). இவர் நேற்று முன்தினம் இரவு ஏழு மணியளவில் மனைவி சோனி, மூன்று குழந்தைகளுடன் பைக்கில் நித்திரவிளை நோக்கி வந்து கொண்டிருந்தார். நித்திரவிளை சந்திப்பு அருகே வந்தபோது எதிரே தாறு மாறாக வந்த அம்பாசிடர் கார் ஓன்று பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்த குழந்தை ஸ்கைலா (5) தூக்கி வீசப் பட்டு தலையில் காயம் ஏற்பட்டது. ததேயுஷ்புவும் காயமடைந்தார்.

விபத்து ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்று விட்டது. உடனே அந்த பகுதியில் கூடியவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் காயம் பட்ட வர்களை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு காயம் பட்ட இருவரும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய கார் தொடர்ந்து வேகமாக சென்று கலிங்கராஜபுரம் பகுதியில் எதிரே வந்த பைக், ஆட்டோக்கள் மீது உரசியபடி சென்றுள்ளது. தொடர்ந்து வாகனம் கட்டுக்கடங்காத வேகத்திலும், தாறுமாறாகவும் சென்றதை கண்ட பொது மக்கள் அதை துரத்தி சென்று பள்ளிக்கல் பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர்.

இதுகுறித்து நித்திரவிளை போலீசுக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடம் சென்ற போலீசார் நடத்திய விசாரணையில் விபத்து ஏற்படுத்தியபின், வாகனத்தை நிறுத்தாமல் சென்றது காஞ்ஞாம்புறம் தெருவுமுக்கு பகுதியை சார்ந்த சுரேந்திரன் (44) என் றும், அவர்ஏழு தேசம் பேரூராட்சி ஊழியர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வாகனத்தை காவல் நிலையம் கொண்டு சென்றனர். சுரேந்திரன் போதையில் காணப்பட்டதால் அவரை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது சம்பந்தமாக ததேயு ஷிபு கொடுத்த புகாரில் நித்திரவிளை போலீசார் சுரேந்திரன் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top