நாகர்கோவில் நகரில் சனிக்கிழமை கூடும் கருவாட்டு சந்தை

நாகர்கோவில் நகரில் சனிக்கிழமை கூடும் கருவாட்டு சந்தை

in News / Local

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு மீன் சந்தைகள் இயங்கினாலும், நாகர்கோவில் நகரில் சனிக்கிழமை கூடும் கருவாட்டு சந்தை, கருவாடு பிரியர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளது.

நாகர்கோவில் நகரில் சனிக்கிழமை கூடும் கருவாட்டு சந்தை

நாகர்கோவில் நகரின் பரப்பரபான வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் இந்த மீன் சந்தையில் வாரத்தின் அணைத்து நாட்களில் மீன் வியாபாரம் நடைபெற்றாலும், சனிக்கிழமை மாலை வேளையில் கூடும் கருவாட்டு சந்தை தான் மிகவும் பிரபலம். கன்னியாகுமரி மாவட்டத்தின் பலபகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் பக்கத்து மாவட்டமான திருநெல்வேலி மாவட்ட்த்தின் கடற்கரை கிராமங்களான கூடுதாளை, வீரபாண்டியப்பட்டணம், உவரி, கூட்டப்பணை மற்றும் கேரளாவின் பல பகுதிகளிலிருந்தும் இங்கு கருவாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. சாளை, அயிலை, வாளக் கருவாடு, முரக்கருவாடு, பண்ணா கருவாடு மற்றும் பல்வேறு வகையான கருவாடுகள் இங்கு கிடைக்கின்றன. மேலும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள சந்தைகளிலிருந்தும் வியாபாரிகள் இந்த சனிக்கிழமை நடைபெறும் கருவாட்டு சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான கருவாடுகளை விற்பனைக்கு வாங்கி செல்கின்றனர்.

நாகர்கோவில் நகரில் சனிக்கிழமை கூடும் கருவாட்டு சந்தை

நாகர்கோவில் நகராட்சியால் நிர்வகிக்கப்படும் இந்த சந்தை அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பல ஆண்டுகளாக இயங்கி வந்திருந்த நிலையில், சமீபத்தில் தான் பழைய கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு இயங்கி வருகிறது.

இந்த சந்தையில் விற்கப்படும் கருவாடுகள் தரமானதாக இருப்பதால் ஒரு வாரம் வரை கெட்டுப் போகாமல் இருப்பதாக இங்குள்ள வியாபாரிகள் கூறுகின்றனர். கன்னியாகுமரி மாவட்ட கருவாடுகளுக்கு என்று தனி சுவை உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குமரிக்கு வருகை தரும் மக்கள் இந்த கருவாட்டு சந்தையில் இருந்து கருவாடு வாங்கி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாகர்கோவில் நகரில் சனிக்கிழமை கூடும் கருவாட்டு சந்தை

சனிக்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு துவங்கும் இந்த கருவாட்டு சந்தை மாலை 6 மணி வரை இயங்கும். சுமார் 60 கடைகள் வரை இருக்கக்கூடிய இந்த சந்தையில் வாரம் தோறும் 1.5 லட்சம் ரூபாய் அளவுக்கு வியாபாரம் நடைபெறுகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top