குமரி மாவட்டத்தில் நிலநடுக்கம் - கட்டிடங்கள் லேசான அதிர்ச்சி!

குமரி மாவட்டத்தில் நிலநடுக்கம் - கட்டிடங்கள் லேசான அதிர்ச்சி!

in News / Local

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது .அசாம் மாநிலத்தில் நேற்று முன்தினம் ஏழு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது இதில் மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்தபடி வெளியே வந்து சாலையில் தஞ்சமடைந்தனர் தலைநகர் கவுகாத்தியில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள பகுதியில் சில சேதங்கள் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டது கன்னியாகுமரி ஒற்றையால்விளை,லீபுரம், சுசீந்திரம் அழகப்பபுரம், மருங்கூர், நாகர்கோவில், கோட்டார் உள்ளிட்ட இடங்களில் லேசான நில அதிர்வு காரணமாக கட்டிடங்கள் லேசாக குலுங்கியது.

மேலும் இருக்கைகள்,கட்டில் ஆடியதால் மக்கள் பீதியடைந்தனர் இதுகுறித்து நாகர்கோவிலைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் கூறியதாவது நேற்று சுமார் 4 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. சில இடங்களில் பெரிய வெடிச்சத்தம் கேட்டது போல் உணர்ந்ததால் மக்கள் அலறி அடித்தபடி ரோட்டில் தஞ்சமடைந்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top