தேர்தல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

தேர்தல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

in News / Local

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும், காலியாக உள்ள ஒரு நாடாளுமன்ற தேர்தலுக்கும் வருகிற 6-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியம் பற்றி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதேபோல பொதுமக்களிடையே தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமரி மாவட்டத்தில் சைக்கிள் பேரணி நேற்று நடந்தது. பேரணியானது களியக்காவிளையில் இருந்து தொடங்கிய திருத்துவபுரம், மார்த்தாண்டம், இரவிபுதூர்கடை, அழகியமண்டபம், தக்கலை, குமாரகோவில், வில்லுக்குறி, பார்வதிபுரம், கலெக்டர் அலுவலகம், கோட்டார், சுசீந்திரம் வழியாக கன்னியாகுமரி சென்று முடிவடைந்தது. 

இதில் தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்று பேரணியாக வந்தனர். முன்னதாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பேரணியை மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி வரவேற்றார். பின்னர் முதல் முறையாக வாக்களிக்க உள்ள கல்லூரி மாணவ-மாணவிகள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று கூறினார்.முன்னதாக களியக்காவிளையில் பேரணியை தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். 

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top