செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 100 மலைவாழ் குழந்தைகள் சேர்ப்பு வசந்தகுமார் எம்.பி. தவணை தொகையை செலுத்தினார்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 100 மலைவாழ் குழந்தைகள் சேர்ப்பு வசந்தகுமார் எம்.பி. தவணை தொகையை செலுத்தினார்

in News / Local

அஞ்சல் துறையின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு வருடம்தோறும் 250 ரூபாய் செலுத்தினால் குழந்தைகள் வளர்ந்த பிறகு அந்த பணம் திருமணம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பயன்படும்.

இந்த நிலையில் குமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார், குமரி மாவட்டத்தில் உள்ள ஆறு காணி, பத்து காணி, கோதையார் கீழ் பகுதியில் உள்ள மலைவாழ் மக்களின் 100 குழந்தைகளுக்கு முதல் வருடத்துக்கான தவணை ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை நாகர்கோவில் வெட்டுர்ணிமடத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தபால் துறை அதிகாரிகள் சிவகுமார் மற்றும் ராம்குமாரிடம் வழங்கினார். இதில் ஆனந்த் ஆரோக்கியராஜ், சீனிவாசன், ஜோசப்ராஜ், முருகானந்தம், ஹரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே வசந்தகுமார் எம்.பி., அருவிகரை ஊராட்சியில் உள்ள பெண் குழந்தைகளுக்கு, தனது சொந்த பணத்தில் செல்வமகள் திட்டத்தில் முதல் வருடத்திற்கான தவணை ரூபாய் 30 ஆயிரம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top