மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர்களுக்கு போலீசார் நூதன தண்டனை!

மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர்களுக்கு போலீசார் நூதன தண்டனை!

in News / Local

குமரி மாவட்டத்தில் பள்ளி.கல்லூரிகள் முன்பு வாலிபர்கள் நின்று ஈவ் டீசிங் செய்வது, மாணவிகள் செல்லும் சாலையில் பைக்குகளில் அதிவேகமாக செல்வது, சாகச செயல்களில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்கள். இது போன்ற செயல்களில் ஈடுப் டும் வாலிபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை இரணியல் பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் முன் 5 வாலிபர்கள் அமர்ந்து அந்த வழியாக வரும் மாணவிகளை கேலி கிண்டல் செய்து கொண்டிருந்தனர். இது குறித்து இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராபின்ஜெயன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர்கள் தப்பியோட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் என தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களுக்கு நூதன தண்டனை கொடுக்க முடிவு செய்தனர். இதன்படி அந்த மாணவர்கள் தாங்கள் செய்தது தவறு என்பதை உணரும் வகையில், மாணவிகளை கேலி செய்தது தவறு.
இதுபோல் இனிமேல் செய்யமாட்டேன் என 501 முறை எழுத வேண்டும் என கூறினர். இதன்படி ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக தாளில் 501 தடவை அப்பாலஜி போல் எழுதி கொடுத்தனர். அதன்பின் போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top