இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளுக்கு விலக்கு!

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளுக்கு விலக்கு!

in News / Local

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பலவகை தொழில்நுட்ப பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத்தேர்வு நடத்துவது குறித்து ஆராய, உயர்மட்டக் குழு ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது தமிழக முதல்வர், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளுக்கு விலக்கு அளித்து, மாணவர்கள் அனைவரும் அடுத்த கல்வியாண்டிற்கு செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top