மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே கர்ப்பிணிக்கு வயல்வெளியில் பிரசவம் பார்த்த விவசாய பெண்கள்!

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே கர்ப்பிணிக்கு வயல்வெளியில் பிரசவம் பார்த்த விவசாய பெண்கள்!

in News / Local

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ் மிட்டாளம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி சிலம்பரசன் (25). இவரது மனைவி சோனியா(22). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 3-வது முறையாக கர்ப்பமடைந்த சோனியா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று காலை திடிரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை அதே பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நரியம்பட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அழைத்துச் சென்றனர்.

நரியம்பட்டு அடுத்த ரகுநாதபுரம் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது சோனியாவுக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டு துடித்தார். இதனால் சாலையோரம் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனே அவரை சாலையோரம் உள்ள வயல்வெளிக்கு அழைத்து சென்று கிராம பெண்களை உதவிக்கு அழைத்தனர்.

அங்கு விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த பெண்கள் உடனே தங்கள் வேலைகளை நிறுத்தி விட்டு ஓடி வந்த பெண்கள் சோனியாவை வயலுக்கு அழைத்து சென்று பெண்ணை சுற்றிலும் சேலைகளை கட்டி பிரசவம் பார்த்தனர்.

மேலும், மருத்துவமனை ஊழியர்களும் உடனிருந்தனர். சோனியா சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர், சோனியாவையும், குழந்தையையும் நரியம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். வயல்வெளியில் இளம்பெண்ணுக்கு பிரசவம் பார்த்த கிராம பெண்களுக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top