ஊராட்சி மன்ற தலைவருடன் தனிமையில் பெண் வி.ஏ.ஓ: பொதுமக்கள் உதவியால் கதவை பூட்டிய கணவர்!

ஊராட்சி மன்ற தலைவருடன் தனிமையில் பெண் வி.ஏ.ஓ: பொதுமக்கள் உதவியால் கதவை பூட்டிய கணவர்!

in News / Local

ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டில் தனிமையில் பெண் விஏஓ இருந்ததை அறிந்த அவரது கணவர் பொதுமக்கள் உதவியுடன் வீட்டை வெளியே பூட்டியதால் சிவகங்கை அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சொக்கநாதன்புத்தூர் என்ற பகுதியில் வி.ஏ.ஓஆக இருந்து வருபவர் வித்யா. இவருக்கும் அதே ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் கண்ணன் என்பவருக்கும் இடையில் முதலில் பழக்கம் ஏற்பட்டு அதன் பின்னர் கள்ளக் காதலாக மாறியதாக கூறப்படுகிறது

இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்ததாக தெரியவந்த நிலையில் இருவரையும் கையும் களவுமாகப் பிடிக்க அவரது கணவர் உள்பட அந்த ஊர் பொது மக்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் கண்ணனின் இல்லத்திற்கு வித்யா வந்ததை அறிந்த அவருடைய கணவர் ஊர் மக்களை திரட்டி கண்ணனின் வீட்டிற்கு வெளியே பூட்டு போட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வித்யாவின் கணவரிடமும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி, வீட்டினுள்ளே அடைக்கப்பட்டிருந்த கண்ணன் மற்றும் வித்யாவை மீட்டனர். இதுகுறித்து துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சிவகங்கை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top