போலீஸ் குடும்பத்திற்கு ரூ.86,50,000 நிதி உதவி!

போலீஸ் குடும்பத்திற்கு ரூ.86,50,000 நிதி உதவி!

in News / Local

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மணக்கரை வனப்பகுதியில் குற்றவாளிகளைத் தேடிச் சென்ற காவலர்கள் மீது வெடிகுண்டு வீசப்பட்டதில் காவலர் சுப்பிரமணியனின் என்பவர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் அவரது குடும்பத்தினருக்கு நிதி உதவியாக ரூ 86,50,000 இன்று தமிழக காவல் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

ரவுடியை பிடிக்க சென்ற போது வெடிக்குண்டு வெடித்து வீரமரணமடைந்த வீரர் தெய்வத்திரு . சுப்பிரமணியன் அவர்கள் வீட்டிற்கு மதுரை தென் மண்டல ஐ.ஜி திரு.எஸ்.முருகன் IPS அவர்கள் தென் மண்டல காவல்துறை சார்பாக ரூபாய் 86,50,000 / நிதியுதவி வழங்கினார்.

கடந்த 18.08.2020 அன்று துரைமுத்து என்ற ரவுடியை பிடிக்கச் சென்றபோது, ரவுடி தன் கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வீசியதில் காவலர் தெய்வத்திரு . சுப்பிரமணியன் அவர்கள் வீர மரணமடைந்தார் . அவரது குடும்பத்திற்கு காவல்துறை சார்பாக நிதியுதவி வழங்க மதுரை தென்மண்டல ஐ.ஜி திரு.முருகன் IPS அவர்களின் அறிவுறுத்தலின்படி, தென் மண்டல காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை ஆளினர்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப நிதியுதவி பங்களிப்பு செய்துள்ளனர்.

அந்த பங்களிப்பு ரூபாய் 86,50,000 யை இன்று (31.08.2020) மதுரை தென் மண்டல ஐ.ஜி திரு.எஸ்.முருகன் IPS அவர்கள் ஏரல் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பண்டார விளையில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தாரிடம் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார் . அவருடன் திருநெல்வேலி டி.ஐ.ஜி திரு.பிரவீன்குமார் அபிநபு IPS அவர்கள், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு . எஸ்.ஜெயக்குமார் அவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் அவரது வீரத்தை தமிழக காவல்துறை வரலாறு என்றென்றைக்கும் சொல்லிக்கொண்டே இருக்கும் அவரை இழந்த தங்கள் குடும்பத்திற்கு காவல்துறை சார்பாக என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top