தீ தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வீரர்களுடன் இணைந்து செயல்பட தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவுப்படி தமிழ்நாடு தீயணைப்பு துறையில் தமிழகம் முழுவதும் அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தீ தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் தென்மண்டல துணை இயக்குநர் பி.சரவணகுமாரின் ஆலோசனையின் படி கன்னியாகுமரி மாவட்டத்திலும் தீ தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு நாகர்கோவில் தீயணைப்பு நிலையம் மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தில் ஒரு நாள் சிறப்புப்பயிற்சி நடைப்பெற்றது.இதில் கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மாவட்ட அலுவலர்.பா.சரவணபாபு தலைமையில் தாங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஏழு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள 50 தீ தன்னார்வ தொண்டர்கள் இந்த சிறப்பு பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர் . இந்தப்பயிற்சி முகாமில் ஆரம்பக்கட்ட தீயணைப்பு பயிற்சிகள் , தீயணைப்பான்கள் இயக்கி தீயை அணைக்கும் பயிற்சிகள், கயிறு ஏறும் பயிற்சி மற்றும் ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டிடத்திற்கு கயிறு மூலம் செல்லும் பயிற்சி,சிறப்பு மீட்பு உபகரணங்கள் இயக்கும் பயிற்சி , வெள்ளம் சூழ்ந்த இடங்களில் உள்ள நபர்களை மீட்கும் பயிற்சி , தன்னிடமுள்ள பொருட்களை வைத்து எவ்வாறு மிதவைகள் தயாரிப்பது , அந்த மிதவைகள் மூலம் தம்மை எவ்வாறு காப்பாற்றிக் கொள்வது போன்ற பயிற்சிகள் நடத்தப்பட்டது . இந்த பயிற்சி முகாமில் உதவி மாவட்ட அலுவலர்.பி.கார்த்திகேயன் , நிலைய அலுவலர்.ம.துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments