மார்த்தாண்டம் அருகே மீன் வியாபாரிகள் மோதல்!

மார்த்தாண்டம் அருகே மீன் வியாபாரிகள் மோதல்!

in News / Local

மார்த்தாண்டம் அருகே நந்தன்காடு ஆர்.சி தெருவை சேர்ந்தவர் அமலபுஷ்பம் (52). அதே பகுதியை சேர்ந்தவர் பத்ரோஸ் (48). இருவரும் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். தொழில் போட்டி, பணம் கொடுக்கல் வாங்கலில் இவர்களிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2ம்தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பத்ரோஸ், தகாத வார்த்தைகள் பேசி அமலபுஷ்பத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்தவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதே போல் அமலபுஷ்பம் மற்றும் அருமனையை சேர்ந்த மதன் (35) ஆகியோர் தன்னை கத்தியால் தாக்கி காயப்படுத்தியதாக, பத்ரோஸ் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையிலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top