கன்னியாகுமரி அருகே பேத்தியை பலாத்காரம் செய்த மீனவருக்கு 10 ஆண்டு சிறை!

கன்னியாகுமரி அருகே பேத்தியை பலாத்காரம் செய்த மீனவருக்கு 10 ஆண்டு சிறை!

in News / Local

கன்னியாகுமரி அருகே தனது பேத்தியை, பலாத்காரம் செய்த மீனவருக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து நாகர்கோவில் மகளிர் விரைவு நீதிமன்றம் பரப்ரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் பகுதியை சேர்ந்த 55வயது மீனவர் ஒருவர், கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம், வீட்டில் தனியாக இருந்த தனது 8வயது பேத்தியை மிட்டாய் வாங்கி தருவதாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். பாதிக்கப்பட்ட சிறுமி, தனது தாயார் வந்ததும் நடந்த சம்பவத்தை கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் மற்றும் உறவினர்கள் மீனவரை தேடி சென்றனர். ஆனால் அவர் தலைமறைவாகி இருந்தார். பின்னர் இது குறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்போதைய இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மீனவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாண் ஆர்.டி.சந்தோசம் நேற்று தீர்ப்பளித்தார். இதில் பாதிக் கப்பட்டவர் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமி என்பதால், சட்டப்பிரிவு 5 (எம்) அடிப்படையில் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதம் கட்டதவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். தீர்ப்பை கேட்டதும் மீனவர் கதறி அழுதார். பின்னர் அவரை போலீசார் பாதுகாப்புடன், சிறைக்கு அழைத்து சென்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top