குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விசைப்படகு மூலம் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வருடத்திற்கு சுமார் 35 முறை ஆழ்கடலுக்குள் சென்று தங்கி மீன்பிடித்து வருகிறார்கள். இதனால் மீனவர்கள் டீசலுக்கு மிகப்பெரிய தொகையை ஒதுக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் கடலிலே பயன்படுத்துகின்ற டீசலுக்கு அரசு சாலை வரியாக ஒரு லிட்டருக்கு 18 ரூபாயும், பசுமை வரியாக ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் சேர்த்து ஒரு லிட்டர் டீசலுக்கு 21 ரூபாய் வசூலிக்கின்றன.
குமரி மாவட்டத்தில் உள்ள 1200 விசைப்படகுகளில் இருந்து மட்டுமே சுமார் 370 கோடி ரூபாய் ஒரு வருடத்துக்கு சாலை வரியாகவும், பசுமை வரியாகவும் அரசு வசூலிக்கிறது. கடலிலே சாலை அமைக்கப்படவில்லை, மரம் நடப்படவில்லை, கட்டுமானமும் கட்டப்படவில்லை. ஆனால் வரி வசூலிக்கப்படுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனை கண்டித்து குமரி மாவட்ட மீனவர்கள் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில், தங்களது விசைப்படகில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் மீனவர்களின் ஆர்ப்பாட்டமும் நடந்தது. இதில் தெற்காசிய மீனவ தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments