ஆடி அமாவாசை:வரலாற்றில் முதல்முறையாக குமரி கடற்கரை கலை இழந்து காணப்படுகிறது..!

ஆடி அமாவாசை:வரலாற்றில் முதல்முறையாக குமரி கடற்கரை கலை இழந்து காணப்படுகிறது..!

in News / Local

ஆண்டு தோறும் ஆடி அமாவாசை நாளில் தனது முன்னோர்களுக்கு திதி கொடுப்பதிற்காக முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் தங்களின் மூதாதையர்களுக்கு தர்பணம் கொடுக்க அதிகாலை முதலே கன்னியாகுமரி கடற்கரைக்கு வருகை தருவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனாவில் பிடியில் சிக்கி தவித்து கொண்டுள்ளது.கொரோனாவால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஏன் குறிப்பாக இந்திய மக்கள் தங்களில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுள்ளனர்.அரசு பல்வேறு உத்திகளை கையாண்டும் கொரோனாவின் தாக்கத்தையும் அதனால் ஏற்படும் சிரமங்களையும் பொதுமக்கள் நேரடியாகவே பாதிக்கிறது.

மனிதனுக்கு எது நடந்தாலும் அவன் நாடி செல்வது ஆலயங்கள் தான் ஆனால் அதை கூட அடைத்து போட்டது கொரோனா.இப்படி இருக்கும் கொரோனா முன்னோர்களுக்கு மட்டும் காரியம் செய்ய விடுமா என்ன…..

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆடி அமாவாசையான இன்று குமரி கடலில் பொதுமக்கள் தங்களது முன்னோருக்கு வழிபாடு செய்வதற்கு குமரிமாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்..

ஆடி அமாவாசையான இன்று வரலாற்றில் முதல்முறையாக குமரி கடற்கரை கலை இழந்து காணப்படுகிறது. குமரிக்கு வரும் மக்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி வருகின்றனர்

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top