இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு பிஎஸ்என்எல் இலவச தொழிற்பயிற்சி 19ம் தேதி தொடக்கம்!

இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு பிஎஸ்என்எல் இலவச தொழிற்பயிற்சி 19ம் தேதி தொடக்கம்!

in News / Local

நாகர்கோவில் பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர் சஜிகுமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் நாகர்கோவில் பிஎஸ்என்எல் நிறுவனமும் இணைந்து பி.இ, பி.டெக். படித்து வேலை இல்லா இளைஞர்களுக்கான இலவச தொழில்நுட்ப பயிற்சி இன்பர்மேஷன் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் பிரிவில் வரும் 19ம் தேதி முதல் தொடங்கி 8 வாரங்களுக்கு வழங்க உள்ளது. இந்த பயிற்சியின் போது பங்குபெறும் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையாக தினப்படி ரூ.100 வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள தொலைபேசி நிலையம் வந்து பட்டப்படிப்புசான்றிதழ், ஆதார் அட்டைதினப்படி பெறுவதற்கான வங்கி கணக்கு பாஸ் புத்தகமுதல் பக்க நகல் மற்றும் ஒரு பாஸ் போர்ட் அளவு புகைப்ப டம் ஆகியவற்றுடன் பதிவு செய்து பயிற்சியில் நேரடி யாக சேர்ந்துகொள்ளலாம். அல்லது ஆன்லைன் முறை ilergmttcbsnl.co.in/jobportal என்ற இணையதளத்தில் பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் நேரடியாக பதிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top