குமரியில் விநாயகர் சிலைகளை வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. குமரியில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி நாளன்று இந்து முன்னணி,பாஜக,இந்து மகாசபா மற்றும் சிவசேனா சார்பில் விநாயகர்சிலைகளை பிரதிஷ்டை செய்து ஒருவார கால பூஜை நடத்தப்படுவது வழக்கம். பின்னர் கடலில் கரைக்கும் நாளில் ஊர்வலமாக எடுத்து செல்லும் நிகழ்வு வருடம் வருடம் நடைப்பெற்று வருகிறது.
இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் இந்த ஆண்டு விநாயகர் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டது.மற்றும்
பொது நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கேட்டு தமிழக பாஜ தலைவர் முருகன் தமிழக முதல்வரை சந்தித்து கோவில்களில் விநாயகர்சிலை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும் ஊர்வலம் போன்ற நிகழ்வுகள் இருக்காது என்று உறுதியளித்தார் அதை தொடர்ந்து தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசித்து அனுமதிப்பது குறித்து பதில் தருவதாக கூறியிருந்தார்.
இதன்படி தமிழக டிஜிபி திரிபாதி அவர்களை அழைத்து பேசினார்…இந்நிலையில் நேற்று மாலை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து இந்து அமைப்பு பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் நடைபெற்றது.இதில் இந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் மிசாசோமன்,செல்லன் ,நம்பிராஜன்,இந்து மகா சபா மாநில தலைவர் தா.
பாலசுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.இதில் இந்து இயக்க நிர்வாகிகள் தரப்பில் பொது இடங்களில் சிலைகள் வைக்க மாட்டோம் பெரிய சிலைகள் வைக்கப்படாது கடலில் சிலைகளை கரைக்க மாட்டோம் சிலைகளை 3 நாட்கள்( இந்து மகா சபா 2 நாள் )மட்டுமே வைத்து பூஜிப்போம் பொது நிகழ்ச்சிகள் கலை நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படாது . இதற்கு பதிலாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி மட்டும் நடத்தப்படும் . கபசுரக்குடி நீர் வழங்கப்படும் . சிலைகளை வைத்தவர்களே அருகில் உள்ள நீர் நிலைகளில் ஊர்வலம் எதுவும் சிலையை எடுத்து செல்லாமல் ஆற்றில் கரைப்போம் என தெரிவித்தனர்.
இதற்கு மாவட்ட ஆட்சியரும் , பொது இடங்களில் சிலை வைக்க கூடாது. கடலில் கரைக்க கூடாது என்றுதான் அரசு உத்தரவிட்டுள்ளது . எனவே இந்து அமைப்புகள் வேண்டுகோள் படி சிலைகள் வைத்தவர்களே அருகில் உள்ள நீர் நிலைகளில் , ஊர்வலம் இன்றி கரைத்து கொள்ள அனுமதி அளிப்பதாக கூறினார் இந்த முடிவை இந்து அமைப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.
0 Comments