திங்கள்சந்தை - திக்கணங்கோடு சாலையில் குவியும் குப்பைகள்; தோற்று நோய்  பரவும் அபாயம்!

திங்கள்சந்தை - திக்கணங்கோடு சாலையில் குவியும் குப்பைகள்; தோற்று நோய் பரவும் அபாயம்!

in News / Local

திங்கள்சந்தையில் இருந்து மேக்கோடு, பாளையம், இலந்தவிளை வழியாக திக்கணங்கோடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் 100க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தசாலையில் கொல்லாய் அருகே ரோட்டோரம் மாமிசம் மற்றும் ஓட்டல் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் மாமிச கழிவுகளை வாகனங்களில் - மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர்.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த கழிவுகளை உண்பதற்காக தெருநாய்கள் மற்றும் கால்நடைகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன. இவை ஒன்றுக்கொன்று சண்டை போடுவதால் கழிவுகள் அனைத்தும் சாலையில் சிதறுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் புழு, கொசு உற்பத்தியாகி பெரும் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது.

இதனால் இந்த வழியாக நடந்து அல்லது வாகனங்களில் செல்வோர் மூக்கை பொத்திக்கொண்டு தான் !செல்ல வேண்டிய நிலை உருவாக்கி உள்ளது. இது தொற்று நோய்கள் பரவுவதற்கும், விபத்துக்கள் ஏற்படுவதற்கும் காரணமாக உள்ளது. - தற்போது மழை தண்ணீருடன் இந்த கழிவுகளும் கலந்து அந்த பகுதி முழுவதும் சுகாதாரகேட்டை ஏற்படுத்துகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் இங்கு கழிவுகள் கொட்டாத வகையில் எச்சரிக்கைபலகை வைத்து, மீற கிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top