நாகர்கோவிலில், திருமணம் நிச்சயமான இளம்பெண் மாயம்!

நாகர்கோவிலில், திருமணம் நிச்சயமான இளம்பெண் மாயம்!

in News / Local

நாகர்கோவிலில் உள்ள கோட்டார் சரக்கல்விளை பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மகள் ஐஸ்வர்யா (20). டிப்ளமோ முடித்துள்ளார். இவருக்கும், உறவினர் மகன் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. வருகிற 1ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்திருந்தனர். திருமணத்துக்கான அணைத்து ஏற்பாடுகளில் இரு வீட்டாரும் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் மதியம் வீட்டில் தனியாக இருந்த ஐஸ்வர்யா, திடீரென மாயம் ஆனார். மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை . இதனால் அதிர்ச்சி அடைந்த இசக்கிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர், ஐஸ்வர்யாவை பல்வேறு இடங்களில் தேடினர். தோழிகள், உறவினர்கள் வீடுகளிலும் விசாரித்தனர். ஆனால் ஐஸ்வர்யா குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. இதையடுத்து கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காதல் பிரச்னையில் ஐஸ்வர்யா மாயமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top