கொரோனா முன்களத்தில் சிறப்பான பணி குமரி தீயணைப்பு வீரர் உள்பட 27 பேருக்கு தங்கப்பதக்கம்!

கொரோனா முன்களத்தில் சிறப்பான பணி குமரி தீயணைப்பு வீரர் உள்பட 27 பேருக்கு தங்கப்பதக்கம்!

in News / Local

கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் முன்களத்தில் சிறப்பாக பணியாற்றிய குமரி தீயணைப்பு வீரர் துரைராபின் உள்பட 27 அரசு ஊழியர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக பொதுத்துறை முதன்மைச்செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) ப.செந்தில்குமார் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் பல்வேறு துறைகளில் முன்களப் பணியாளராக சிறப்பாக பணியாற்றியதற்காக பதக்கம் மற்றும் சான்றிதழ் 27 பேருக்கு வழங்கப்படுகிறது.

மக்கள் நல்வாழ்வுத் துறையைச் சேர்ந்த டாக்டர் ராஜேந்திரன் (சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை), டாக்டர் உமா மகேஸ்வரி (விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை), விரிவுரையாளர் டாக்டர் ஆ.சதீஷ்குமார் (சென்னை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி), செவிலியர்கள் என்.ராமுதாய் (சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை), கிரேஸ் எமைமா (சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை), செவிலியர் கண்காணிப்பாளர் ஆதிலட்சுமி (கோவை மாவட்டம் ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை), துணை இயக்குனர் எஸ்.ராஜூ (மாநில சுகாதார ஆய்வகம்), கோவை சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், பழனி ஆய்வக நுட்புனர் ஜீவராஜ்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை காவலர் எஸ்.சையித் அப்தாகீர், விழுப்புரம் மாவட்ட அனந்தபுரம் சப்-இன்ஸ்பெக்டர் டி.நரசிம்மஜோதி, சென்னை ஜி-5 தலைமைச்செயலக காலனி இன்ஸ்பெக்டர் இ.ராஜேஸ்வரி.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தீயணைப்போர் ஓட்டி ஐ.துரைராபின், பெரம்பலூர் மாவட்டம் துறையூர் தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்போர் ச.பழனிசாமி, சென்னை புறநகர் மணலி முன்னணி தீயணைப்போர் எஸ்.கருணாநிதி.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் துப்புரவு ஆய்வாளர் எஸ்.ரகுபதி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் துப்புரவு ஆய்வாளர் பி.பாண்டிச்செல்வம், சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் எஸ்.கலையரசன், திருவள்ளூர் மாவட்டம் நாரவாரிக்குப்பம் தூய்மைப் பணியாளர் எம்.ஏசுதாஸ், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் ஈ.ஜெய்சங்கர், ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணியாளர் மா.சங்கர்.

காஞ்சீபுரம் மாவட்ட குன்றத்தூர் வட்டாட்சியர் எஸ்.ஜெயச்சித்ரா, சேலம் மாவட்டம் மேட்டூர் மண்டல துணை வட்டாட்சியர் கே.ஜெயந்தி, விருதுநகர் மாவட்டம் கஞ்ச நாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் து.பிரத்விராஜ்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் சென்னை அடையாறு ரேஷன் கடை பட்டியல் எழுத்தர் ஆர்.தியாகமூர்த்தி, சென்னை தாம்பரம் மொத்த விற்பனை பண்டகசாலை ரேஷன் கடை விற்பனையாளர் பி.ரமாமணி, காஞ்சீபுரம் மாவட்டம் விப்பேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடை விற்பனையாளர் டி.தமிழ்செல்வன் ஆகியோர் விருதை பெறுகின்றனர்.

விருது பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தங்கமுலாம் பூசப்பட்ட பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top