அரசு பள்ளி ஆசிரியை கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை!

அரசு பள்ளி ஆசிரியை கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை!

in News / Local

குமரி மாவட்டம் தக்கலை அருகே கொல்லன்விளையை சேர்ந்தவர் வேலுதாஸ் (வயது 51), நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சாந்தினி (46), கல்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுடைய மகள் ராகிணி. இவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படிக்கிறார். சாந்தினி நேற்று முன்தினம் வழக்கம்போல பள்ளிக்கூடத்துக்கு சென்றார்.

எப்போதும் மாணவ-மாணவிகளுடன் மகிழ்ச்சியாக பேசி பழகும் சாந்தினி அன்றைய தினம் மிகவும் அமைதியாக இருந்துள்ளார். மாலையில் வீடு திரும்பிய பின்னரும் இறுக்கமான முகத்துடன் இருந்ததாக தெரிகிறது.

தொடர்ந்து இரவு உணவை முடித்துவிட்டு சாந்தினி தனது அறைக்கு தூங்க சென்றார். ஆனால் காலையில் வெகு நேரம் ஆகியும் அவரது அறை திறக்கப்படவில்லை.

உடனே மகள் ராகிணியும், கணவர் வேலுதாசும் சேர்ந்து அவரது அறை கதவை தட்டினார்கள். ஆனால் உள்ளிருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் ஜன்னலை திறந்து பார்த்தனர். அப்போது அறையில் உள்ள மின் விசிறியில் சாந்தினி தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இருவரும் கதறி அழுதனர். மேலும் இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

செய்தி கிடைத்த உடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

பிணமாக ெதாங்கிய சாந்தினியின் அறையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு கடிதம் கிடைத்தது. அந்த கடிதம், சாந்தினி தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய உருக்கமான கடிதமாகும். அதில், எனக்கு நீண்ட நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. இதற்காக சிகிச்சை மேற்கொண்ட பிறகும் உடல் நலம் சரியாகவில்லை. எனவே எனக்கு மிகவும் மன அழுத்தம் ஏற்பட்டது. மன அழுத்தம் காரணமாக நான் தற்கொலை செய்ய போகிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் கடிதத்தில் எழுதப்பட்டு இருந்த கையெழுத்து சாந்தினியின் கையெழுத்து தானா என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தினியின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமாக இருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறாா்கள். அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top