கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் Hawk Eye என்னும் நவீன தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய சுழலும் கேமரா பொருத்திய கண்காணிப்பு நிலையம் அடங்கிய வாகனத்தை இன்று குமரிமாவட்ட காவல் கண்காணிப்பாளர். பத்ரி நாராயணன் IPS துவக்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர்.பத்ரி நாராயணன்IPS தெரிவித்ததாவது.
இந்த சுழலும் கேமரா பொருத்தப்பட்ட வாகனமானது முக்கிய விழாக்களில் பாதுகாப்பு பணிக்காகவும் , அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கவும் , நவீன கண்காணிப்பு கேமரா பொருந்திய இந்த வாகனம் பயன்பாட்டில் இருக்கும் . இந்த வாகனத்தில் சுழன்று படம் பிடிக்கும் நவீன கேமரா உள்ளதால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போது அங்கு நடைபெறும் நிகழ்வுகளை எளிதாக படம் பிடித்து செயலிகள் ( APP ) மூலம் கண்காணித்து பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட முடியும் . இந்த வாகனத்தில் உள்ள பெரிய திரையில் மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வுக்காக திரையிடப்படும் என்றும் அதிகாரிகளின் கைப்பேசியில் இந்த நவீன கண்காணிப்பு கேமரா காட்சிகளை உடனடியாக பார்வையிட முடியும் என்று இதனால் குற்ற சம்பவங்களை உடனே அறிந்து செயல்பட முடியும் என்று தெரிவித்தார்..
0 Comments