குமரியில் மழை, நிரம்பி வழியும் குமரி அணைக்கட்டு

குமரியில் மழை, நிரம்பி வழியும் குமரி அணைக்கட்டு

in News / Local

குமரிமாவட்டத்தில் உற்பத்தியாகி,குமரிமாவட்டத்தை மட்டும் செழிப்பாக்கி கொண்டிருக்கும் ஆறு பழையாறு. பழையாற்றின் மூலம் சுமார் 15821 ஏக்கர்,பாசன வசதிகள் பெறுகிறது. பழையாற்றின் வழியாக 97 குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. ஆற்றின் குறுக்கே 13 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இன்றும் இந்த அணைகட்டுகள் குமரி மாவட்டத்தின் பாசனத்துக்கும், குடிநீர் திட்டங்களுக்கும் பயன்பட்டு வருகின்றன. பாசனத்தில் பல ஏக்கர் நிலம் இருபோகமும் ,சில ஏக்கர் ஒரு போகமும் விளைகிறது. மிகவும் பழமைவாய்ந்த பழையாறு 30 மீட்டர் அகலம் கொண்டது.

தமிழகத்தில் மழை பெய்கின்ற வடகிழக்கு மற்றும் தென் மேற்கு பருவகாலங்களில் பழையாற்றில் தண்ணீர் ஓடும். தற்போது மக்களின் கவனக் குறைவால் பழையாறு மிகவும் மாசு அடைந்துள்ளது. இப்போதும் பல கோவில்களில் இருந்து சுவாமி ஆறாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பழையாற்றில் வைத்து பூஜைகள் செய்யப்படுவது வழக்கமாக நடந்து வருகிறது. தற்போது , கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகள், குளங்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பழையாற்றின் தடுப்பணைகளில் ஒன்றான நாகர்கோவிலில் உள்ள குமரி அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நிரம்பி ரம்மியமாகக் காட்சியளிக்கிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top