நாகர்கோவிலில் பலத்த மழை சாலைகளில் வெள்ளப்பெருக்கு!

நாகர்கோவிலில் பலத்த மழை சாலைகளில் வெள்ளப்பெருக்கு!

in News / Local

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை மழை தொடர்ந்து பெய்து வந்தது. பின்னர் சில நாட்களாக மழை ஓய்ந்திருந்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தின் எந்தப்பகுதியிலும் மழை அளவு பதிவாகவில்லை.

இந்த நிலையில் நாகர்கோவிலில் நேற்று காலையில் இருந்து மதியம் வரை வெயில் அடித்தது. மதியம் 1.30 மணியளவில் திடீரென வானம் கருமேகக்கூட்டங்களால் சூழ்ந்தது. அதன் பிறகு சுமார் ½ மணி நேரம் பலத்த மழை கொட்டியது. பின்னர் சாரல் மழையாக நீடித்தது.

வெள்ளப்பெருக்கு :

பலத்த மழையால் நாகர்கோவில் வடசேரி அசம்பு ரோடு, கேப் ரோடு, கே.பி.ரோடு, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி ரோடு, செட்டிகுளம் சந்திப்பு ரோடு, செம்மாங்குடி ரோடு, மீனாட்சிபுரம் ரோடு போன்ற பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு ஓட்டி சென்றனர்.

திடீரென கொட்டிய மழையை எதிர்பார்க்காத பாதசாரிகள் பலர் குடை எதுவும் கொண்டு வராததால் மழையில் நனைந்தபடி சாலைகளில் நடந்து சென்றனர். இதேபோல் தக்கலை, குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top