ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குறிப்பிட்ட நேரத்திற்கு உணவு கிடைக்காததால் கொரோனா நோயாளிகள் வார்டை விட்டு வெளியே வந்து மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்த காட்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு என தனியாக வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இது தவிர தனிமைப்படுத்தப்பட்ட அவர்களுக்காகவும் வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மாவட்டம் முழுவதிலும் இருந்து 390 கொரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோன்று தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கும் இன்று காலை 9.30 மணி கடந்தும் உணவு வழங்கவில்லை என்று ஏற்கனவே இந்த நோயாளிகள் பிரச்சனை செய்த நிலையில், மதியமும் இதேபோன்று நோயாளிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு உணவு வழங்கப்படவில்லை என தெரிகிறது.
இதனையடுத்து பசியால் வாடிய நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை விட்டு வெளியே வந்து மருத்துவமனை ஊழியர்களும் வாக்குவாதம் செய்தனர். ஏற்கனவே மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நோயை கட்டுப்படுத்த வேண்டிய மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் வெளியே வந்து போராடும் அளவிற்கு நிர்வாக சீர்கேடு அடைந்துள்ளதாகபொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் இதற்க்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments