சுடசுட இனிப்பு தேன்குழல்

சுடசுட இனிப்பு தேன்குழல்

in News / Local

தேன்குழல் என்பது தமிழர் திருவிழாக்களின் போது செய்யப்படும் இனிப்புப் பலகாரம். இது அடிக்கடி நாம் செய்யும் பலகாரம் இல்லை.இனிப்பு தேன்குழல் முறுக்கு போன்றே தோற்றம் கொண்ட இது அரிசி மாவு, உளுந்து மாவு ஆகியவற்றைக் கலந்து, முறுக்கு அச்சில் பிழிந்து எண்ணெயில் பொரித்தெடுக்கப்படுகிறது. பின்னர் இனிப்புப் பாகில் ஊறவைத்து உண்ணப்படும் .இது அடுத்த செட் வரும் வரை ஊறினால் போதும் அடுத்த செட் ரெடி ஆன உடன் இதை எடுத்து பரிமாறலாம்.

சிலர் விசேஷ நாட்களில் இதை வீட்டில் செய்வார்கள். மற்ற நாட்களில் வேண்டும் என்றால் வெளியில் சுட்டு விற்பவர்களிடம் வாங்கு வார்கள்.திருவிழாக் கடைகளில் சுடசுட செய்யும் தேன்குழலை சாப்பிடும் போது அதன் உள் பகுதியில் இருக்கும் இனிப்பு சொட்டுச்சொட்டாக ஒழுகும். கன்னியாகுமரி மாவட்ட திருவிழாக்களில் தேன்குழல் முக்கிய இடம் பிடிக்கிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top