குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த திருமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் 35. இவருக்கும் பிள்ளைதோப்பு அழிக்கால் பகுதியை சேர்ந்த ஜோஷி 32 என்பவருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த ஒரு ஆண்டாக தம்பதியர் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜோஷி விவகாரத்திற்கு விண்ணப்பித்து சதீஷ்க்கு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் நேற்று மதியம் ஜோஷி வேலைபார்த்து வந்த தனியார் நிறுவனத்திற்க்கு சென்றர். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜோஷியை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இந்நிலையில் தப்பி ஓடிய சதீஷ்சை பொதுமக்கள் பிடித்து வடசேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஜோஷிக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கத்தி குத்து சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
0 Comments