நாகர்கோவிலில்  வீட்டில் தூங்கி கொண்டிருந்த நிலையில் கீழே விழுந்து மர்ம உறுப்புகளில் அடிப்பட்டு கோமா நிலைக்கு சென்ற கணவன்!

நாகர்கோவிலில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த நிலையில் கீழே விழுந்து மர்ம உறுப்புகளில் அடிப்பட்டு கோமா நிலைக்கு சென்ற கணவன்!

in News / Local

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வீட்டில் மனைவியுடன் தூங்கிக்கொண்டிருந்த கணவரை மர்ம கும்பல் வீடு புகுந்து தாக்கியதில் மண்டை உடைந்து கோமா நிலைக்கு சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் என் அண்ணின் இந்த நிலைக்கு அவரது மனைவியின் சதி வேலைகள் தான் காரணம் என போலீசில் புகார்.

என் அண்ணன் கணேஷ் கட்டிலில் இருந்து விழுந்து அடிபட்டதாக அவரது மனைவி கூறுவதன் பின்னணியில் சந்தேகம் உள்ளதாகவும் தம்பி வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் குறித்து போலீசார் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியிலுள்ள கேசவ திருப்பால்புரத்தை சேர்ந்தவர் கணேஷ் (39) இவர் அமெச்சூர் வீடியோ கிராபர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி (31) இவர்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கணவனும் மனைவியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென கணேஷ் கட்டிலில் இருந்து விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியதாக அவரது மனைவி கூறியதை அடுத்து உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு நினைவு திரும்பாமல் இருந்ததால் மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது தொடர்ந்து தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்…

கணேஷ் வீட்டில் உள்ள கட்டிலில் இருந்து கீழே விழுந்ததால் இந்த அளவுக்கு காயம் ஏற்படாது மேலும் அவர் கொடூரமாக யாரோ தலையில் அடித்து கொலை முயற்சியில் தாக்கப்பட்டுள்ளதால் தான் மண்டை ஓடு சேதமாகி உள்ளதாகவும் அவரது விலா மற்றும் மர்ம உறுப்பு போன்றவற்றில் பலமான அடி விழுந்துள்ளது, இதனை மர்ம நபர்கள் வீடுபுகுந்து தாக்கியதால் இந்த காயம் ஏற்பட்டதாகவும் அதேநேரம் கணேஷின் மனைவியும் தனது அண்ணியுமான காயத்ரி கூறுவது போன்று அவர் கட்டிலில் இருந்து கீழே விழ வாய்ப்பில்லை இதன் பின்னணியில் மிகப் பெரிய சதி உள்ளதாகவும் சந்தேகிப்பதாக கணேஷின் சகோதரர் ரமேஷ் கூறியுள்ளார்.

இதுகுறித்து கோமா நிலைக்கு சென்று திரும்பிய கணேஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். எனவே இந்த விஷயத்தில் போலீசார் உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top