மாவட்ட அளவிலான சர்வதேச விளையாட்டு வீரர்களை கண்டறியும் திட்டம் இன்று குமரியில் நடைபெற்றது.

மாவட்ட அளவிலான சர்வதேச விளையாட்டு வீரர்களை கண்டறியும் திட்டம் இன்று குமரியில் நடைபெற்றது.

in News / Local

இன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 2018 - 2019 உலக திறனாய்வு திட்டத்தின்கீழ், பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கும் 6, 7, 8 -ம் வகுப்பு மாணவ, மாணவியர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் பொருட்டு, கல்வி மாவட்ட அளவிலான உலக திறனாய்வு போட்டிகள் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து 06.02.2019, 07.02.2019 மற்றும் 08.02.2019 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இதில் சுமார் 2500 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.கல்வி மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைக்கு ரொக்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு விளையாட்டிலும் முதலிடம் பெறும் போட்டியாளர்கள் மண்டல அளவு போட்டியில் கலந்துக் கொள்ள அழைத்துச் செல்லப்படுவார்கள் என அறிவித்துள்ளனர். மண்டல அளவு போட்டியில் முதல் பத்து இடங்களில் வெற்றிப் பெறும் மாணவ, மாணவியர்களுக்கு ரொக்க பரிசாக ரூ. 6000/- வழங்கப்படும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top