நாகர்கோவிலில், 9 ஆம் தேதி, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்!

நாகர்கோவிலில், 9 ஆம் தேதி, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்!

in News / Local

நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வருகிற 9ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. குமரி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வி தகுதி உடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் வேலைவாய்ப்பு அலுவலர் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார்.

வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ள இளைஞர்கள், இளம் பெண்கள் வருகிற 9ம் தேதி காலை 10 மணிக்கு கோணத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு உரிய சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும் என்றும், தனியார் துறையில் வேலை வாய்ப்பு கிடைத்தாலும், வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது என் றும் அவர் கூறி உள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top