மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் காவடி ஊர்வலம்!

மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் காவடி ஊர்வலம்!

in News / Local

குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து வேல்காவடி, புஷ்ப காவடி பறக்கும்காவடி நிகழ்ச்சிகள் கடந்த 17–ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு தீபாராதனை, மாலை 5 மணிக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருச்செந்தூர் திருப்பணிக்குழு தலைவர் துளசி தலைமையில் நடந்தது.

நேற்றுமுன்தினம் காலை 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 5 மணிக்கு நையாண்டி மேளம், இரவு 7 மணிக்கு வேல் தரித்தல், 7.30 மணிக்கு பூக்குழி இறங்குதல், 8 மணிக்கு காவடி பூஜை, 8.30 மணிக்கு அன்னதானம், 10 மணிக்கு காவடி அலங்காரம் நடந்தது.

நேற்று காலை 7.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, 8 மணிக்கு காவடி பவனி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று, அங்கு தீபாராதனை நடந்தது. மதியம் 1 மணிக்கு அன்னதானமும், 3 மணிக்கு செண்டை மேளமும், மாலை 4 மணிக்கு யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து பறக்கும் காவடி, புஷ்ப காவடி வேல் காவடி ஊர்வலம் புறப்பட்டது. இந்த காவடி ஊர்வலம் மணவாளக்குறிச்சி சந்திப்பு, அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, கணபதிபுரம், ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூரை சென்றடைந்தது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top