கன்னியாகுமரி சட்டசபை தொகுதி வேட்பாளர் பி.டி.செல்வகுமாரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக கமல்ஹாசன் இன்று ஹெலிகாப்டர் மூலம் கொட்டாரம் பொட்டல்குளம் வருகிறார்.
கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளராக பி.டி.செல்வகுமார் போட்டியிடுகிறார்.
இவரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மக்கள் நீதி மய்யம் நிறுவன தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை 4 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொட்டாரம் பொட்டல்குளத்தில் உள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் வந்திறங்குகிறார்.
அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அவர் அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார்.
சர்ச் ரோடு சந்திப்பில் உள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
இந்த தகவலை கன்னியாகுமரி சட்டசபை தொகுதி வேட்பாளர் பி.டி. செல்வகுமார் தெரிவித்தார்.
0 Comments