கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம் பகுதி மிகவும் முக்கியமான இடமாகும். இந்த சிறப்புமிக்க இடத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு அந்த பகுதியில் படித்துறை, அரைவட்ட அரங்கம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பாதுகாப்பு அறை,
அலங்கார நடைபாதை, உடைமாற்றும் அறை, 25 சோலார் மின் விளக்குகள், நவீன குப்பை தொட்டி, கண்காணிப்பு கேமரா, இலவச வைபை வசதி உள்ளிட்ட பணிகளுக்காக சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் மத்திய மாநில அரசுகள் ரூ.3 கோடியே 82 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. அங்கு தற்போது பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்த பணிகளை குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ், சுகாதார அலுவலர் முருகன், கன்னியாகுமரி பேரூராட்சி உதவி பொறியாளர் இர்வின் ஜெயராஜ், மேற்பார்வையாளர் பாபு, சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments