குமரியில் நீராவி என்ஜினுடன் கூடிய ஹெரிடேஜ் ரெயில் இன்று முதல் தொடக்கம்

குமரியில் நீராவி என்ஜினுடன் கூடிய ஹெரிடேஜ் ரெயில் இன்று முதல் தொடக்கம்

in News / Local

நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே சுற்றுலாப் பயணிகளுக்காக பழமையான நீராவி என்ஜின் பொருத்தப்பட்ட ஹெரிடேஜ் ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திட பழமையான நீராவி என்ஜின் மூலம் இயக்கப்படும் "ஹெரிடேஜ் ரயில்' என்றழைக்கப்படும் பாரம்பரிய ரயில் பயணம் பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.

குமரியில் நீராவி என்ஜினுடன் கூடிய ஹெரிடேஜ் ரெயில் இன்று முதல் தொடக்கம்

இங்கிலாந்தில் 1855ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ரயில் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது.
தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட கோட்டங்களில் இயங்கி வந்த இந்த ரயில், இன்று முதல் நாகர்கோவில்- கன்னியாகுமரி இடையே இயக்கப்பட உள்ளது.

இது போன்ற பாரம்பரிய ரெயில் பயணம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு கோட்டங்களில் நடைபெற்றுள்ளது.

இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு 750 ரூபாயும், சிறுவர்களுக்கு 500, வெளிநாட்டவருக்கு 1000 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குமரியில் நீராவி என்ஜினுடன் கூடிய ஹெரிடேஜ் ரெயில் இன்று முதல் தொடக்கம்

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top