காசிக்கு ஆஜராக போவதில்லை -  நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் அதிரடி தீர்மானம்!

காசிக்கு ஆஜராக போவதில்லை - நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் அதிரடி தீர்மானம்!

in News / Local

பெரும் செல்வந்தர் வீட்டுப் பெண்கள், குடும்பப் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் போன்றோரை தனது வலையில் சிக்க வைத்து நாசப்படுத்திய நாகர்கோவில், கணேசபுரத்தை சேர்ந்த சுஜி என்ற காசிக்கு, பொள்ளாச்சி சம்பவத்தில் நடந்தது போலவே, தாங்களும் ஆஜராக போவதில்லை என நாகர்கோவில் வழக்கறிஞர்களும் தெரிவிக்க வேண்டும்'' என்றும், ''பெண்கள் விஷயத்தில் இதுபோன்று நடப்பவர்களுக்கு,  தெலங்கானாவில் நடந்ததுபோல என்கவுண்டர் ஓன்று தான் ஒரே வழி.

இது போன்ற குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையானால் தான் இனிமேல் இதுபோன்ற சம்வங்கள் நடக்காது''  என சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் தனது இணையத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் ''நாகர்கோவில் வழக்கறிஞர்கள் பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் போல செயல்பட வில்லை என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். நக்கீரன் எண்ணியதைப்போல நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது'' என நாகர்கோவில் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

வழக்கறிஞர் மகேஷ்

நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேஷ், ''நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவர் மீது பெண்களை ஏமாற்றுதல், ஆபாச படம் எடுத்து இணையத்தில் வெளியிடுதல், பெண்களை மிரட்டி பணம் பறித்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக காவல்துறை வழக்குப்பதிவு செய்து மேற்படி வழக்குகள் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. காசியின் செயல்கள் மனித குலத்திற்கே எதிராக இருப்பதால் அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளில் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் யாரும் அவருக்காக ஆஜராக போவதில்லை என்றும் மேலும் ''காசிக்கு நாங்கள் யாரும் வாதாட மாட்டோம் என தெரிவித்தனர் . 

இதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தவர் திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மகேஷ் (நகர செயலாளர்) என நாகர்கோவிலைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இந்த முயற்சியினை பலரும் வரவேற்றுள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top