நாகர்கோவில் பாலியல் குற்றவாளி காசி வழக்கில் அடுத்தடுத்து பரபரப்பு….காதல் மன்னன் காசியின் சகோதரி பரபரப்பு குற்றச்சாட்டு

நாகர்கோவில் பாலியல் குற்றவாளி காசி வழக்கில் அடுத்தடுத்து பரபரப்பு….காதல் மன்னன் காசியின் சகோதரி பரபரப்பு குற்றச்சாட்டு

in News / Local

சிபிசிஐடி போலீசார் எங்களை துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள். இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என காசியின் சகோதரி கண்ணீர் மல்க சிபிசிஐடி போலீசார் மீதுகுற்றம் சாட்டியுள்ளார்.

குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த காசி இவன் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளான்.இது தொடர்பாக சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் காசி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த பெண் டாக்டரை தொடர்ந்து காசி மீது குமரிமாவட்டதில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் புகார் செய்துள்ளனர். இதையடுத்து காசி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காசி வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் காசியுடன் தொடர்பு வைத்திருந்த இரண்டு நண்பர்களை கைது செய்தனர்.

மேலும் காசியின் லேப்டாப், மெமரி கார்டு, செல்போன் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்களை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்ததில் இதில் இருந்த ஏராளமான ஆவணங்கள் அழிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் காசியை காப்பாற்றும் நோக்கில் ஆவணங்களை அழித்ததாகக் கூறி காசியின் தந்தை தங்க பாண்டியனை கைது செய்தனர். இந்நிலையில் காசியின் வீட்டிற்கு சென்ற சிபிசிஐடி போலீசார் அவரது தாய் பத்மாவதியை தாக்கியதாகவும் அவரை துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும் காசியின் தங்கை பரபரப்பு குற்றசாட்டை சிபிசிஐடி போலீசார் மீது சுமத்தியுள்ளார்.

எனது தந்தைக்கு கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் இருந்தன. இதனால் அவரை தனிமைப்படுத்தி வைத்திருந்தோம். ஆனாலும் போலீசார் அவரை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுவிட்டனர். எனது தாயின் தலை முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளிய சிபிசிஐடி போலீசார் நெற்றியில் துப்பாக்கி வைத்து மிரட்டினர்.
மேலும் சாத்தான்குளத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் போல் உனது மகனுக்கும் கணவனுக்கும் நடக்கும் என்று கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த எனது தாயார் மயங்கி கீழே விழுந்தார். அவரை நாங்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம்

எனினும் சிபிசிஐடி போலீசார் கொடுத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனை நிர்வாகம் எங்களை வெளியே போகக் கூறியது. இதனால் வேறு வழியில்லாமல் நாங்கள் மற்றொரு தனியார் மருத்துவமனையில் எனது தாயை சிகிச்சைக்காக சேர்த்துள்ளளோம். போலீசார் மிரட்டுவதை பார்த்தால் எனது தந்தை, சகோதரரையும் கொலை செய்து விடுவார்கள் போல் தெரிகிறது.

இந்த வழக்கு கோர்ட் மூலமாக தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் சிபிசிஐடி போலீசார் அதிக இடையூறு செய்து வருகின்றனர். எனவே அரசு தலையிட்டு இதற்கு ஒரு முடிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் எங்களுக்கு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என நாகர்கோவில் காசியின் சகோதரி கண்ணீர் மல்க தெரிவித்தார்.

1 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top