உண்மையான காதல் இருந்தபோது, முன்பெல்லாம் ஆணவக்கொலைகள் நிகழவில்லை என கூறியுள்ள பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, இப்போதெல்லாம் நாடகக் காதலை வைத்து, பணம் பறிக்கும் மாஃபியா கும்பல் தமிழகத்தில் தலை தூக்கியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.
நாளை, வெள்ளித்திரைக்கு வரும் "திரெளபதி "திரைப்படத்தின் முன்னோட்ட காட்சியை பார்த்த பிறகு, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த கருத்தை வெளியிட்டார்.
திரவுபதி, திரைப்படம் ஜாதிப் பிரச்சினைப் பற்றிப் பேசும் படமல்ல என்றும், உண்மையான காதலைப் பற்றிய படம் என்றும், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
0 Comments