நாகர்கோவில் விடுதியில் கேரள திரைப்பட நடிகை ரகளை!

நாகர்கோவில் விடுதியில் கேரள திரைப்பட நடிகை ரகளை!

in News / Local

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் வாடகை பாக்கி கேட்ட லாட்ஜில் கேரள திரைப்பட நடிகை ரகளை செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மலையாள படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், செட்டிக்குளம் பகுதியில் உள்ள விடுதியில் படக்குழுவினர் தங்கியுள்ளனர். அப்போது படக்குழுவினர் உரிய வாடகை பாக்கி தராத நிலையில், நடிகை மஞ்சு சவேர்கர் படுக்கை விரிப்புகள் மாற்றப்படவில்லை என ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அதற்கு, 60 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கி தர வேண்டியிருப்பதாக விடுதி ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. தகவலறிந்து வந்த போலீசார் இருதரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் படக்குழுவினர் லாட்ஜ் வாடகை பாக்கியை கொடுப்பதாக ஒப்புக் கொண்டதை தொடர்ந்து தகராறு முடிவுக்கு வந்தது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top