கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவிலை சேர்ந்த மாணவர் ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் முதலிடமும்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த மாணவர் ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் முதலிடமும்!

in News / Local

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த மாணவர் ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் முதலிடமும் இந்திய அளவில் ஏழாவது இடம் பெற்றுள்ளார் . ஏற்கனவே ஒருமுறை தேர்வெழுதி தோல்வியுற்ற நிலையில் இரண்டாவது முறையாக வெற்றியடைந்துள்ளார்.

நாகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் எஸ். பி பாஸ்கர் இவர் மத்திய அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார் இவரது மகன் கணேஷ் குமார் பாஸ்கர் ( வயசு 27) இவர் அகில இந்திய அளவில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்திய அளவில் ஏழாவது இடம் பெற்றுள்ள இவரை அவரது தாயார் உட்பட பலரும் பாராட்டினார்கள் இதுகுறித்து கணேஷ்குமார் பாஸ்கர் செய்தியாளரிடம் பேசும்போது இது இரண்டாவது முறையாக தேர்வு எழுதி வெற்றி பெற்று உள்ளேன் என்றும்.

ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு தான் எழுதிய தேர்வில் தோல்வியுற்ற நிலையில் நான் மனம் தளராமல் கடின உழைப்புடன் உறுதியுடன் படித்து தற்போது தேசிய அளவில் ஏழாவது இடம் வந்திருக்கிறேன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இதற்கு இந்த அளவில் ஏழாவது இடம் கிடைக்கும் என தான் நினைக்கவில்லை என்றும் தேர்வு முடிவு மகிழ்ச்சி யை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top