குமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா நாளை மறுநாள் தொடக்கம்!

குமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா நாளை மறுநாள் தொடக்கம்!

in News / Local

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நாளை மறுநாள் ( 9 மே ) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இத்திருவிழாவையொட்டி,9 ஆம் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் கொடியேற்றும் வைபவம், 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை, 9 மணிக்கு தேவி பூப்பந்தல் வாகனத்தில் வீதி உலா ஆகியன நடைபெறும்.

திருவிழா நாள்களில் சிறப்பு அபிஷேகம், சமய சொற்பொழிவு, அன்னதானம், கலை நிகழ்ச்சிகள், அம்மன் வீதி உலா வருதல், 5 ஆம் நாளன்று (மே 13) ;இரவு 7.30 மணிக்கு புஷ்பாபிஷேகம் ஆகியன நடைபெறும்.

தேரோட்டம்: 9ஆம் நாளன்று (மே 17) அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், காலை 8 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அன்னதானம், மாலை 6.30 மணிக்கு மண்டகப்படியை தொடந்து சமய சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு வெள்ளிக் கலைமான் வாகனத்தில் வீதியுலா ஆகியன நடைபெறும்.

10ஆம் நாளன்று (மே 18) அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் அம்மன் ஆறாட்டுக்கு எழுந்தருளல், காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பிற்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு மண்டகப்படி, மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 9.30 மணிக்கு அம்மன் தெப்பத்துக்கு எழுந்தருளுதல், தொடர்ந்து தெப்பத் திருவிழா நடைபெறும்.

ஏற்பாடுகளை தேவசம் போர்டு இணை ஆணையர் ம. அன்புமணி, நாகர்கோவில் கண்காணிப்பாளர் எஸ். ஜீவானந்தம், கோயில் மேலாளர் பி. ஆறுமுக நயினார், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top