குமரிமாவட்ட தீயணைப்பு வீரர் தீரவீர செயலுக்கான தங்கப்பதக்கத்தை முதல்வரிடம் பெற்று தீயணைப்பு துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்!

குமரிமாவட்ட தீயணைப்பு வீரர் தீரவீர செயலுக்கான தங்கப்பதக்கத்தை முதல்வரிடம் பெற்று தீயணைப்பு துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்!

in News / Local

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தில் பணிபுரிந்து வரும் தீயணைப்பு வீரர் திரு . துரை ராபின் என்பவர் சென்னையில் நடைபெற்ற 74 – வது சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வரிடமிருந்து கொரானா தடுப்புப்பணி முன்களப்பணியாளர்கள் சிறப்புப்பணி ஆகியவற்றிக்கான விருதை தமிழக முதல்வரிடம் பெற்று தென்மண்டல தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கு பெருமையை சேர்த்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் , நாகர்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தீயணைப்பு வீரர் திரு.துரை ராபின் 1981 – ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் , சூரப்பள்ளம் என்ற கிராமத்தில் ஒரு விவசாய கூலித் தொழிலாளியின் மகனாக பிறந்தார் . இவரது தந்தை ஐயா . துரைராஜ் ஒரு விவசாய கூலித் தொழிலாளி . துரைராபின் 2006 – ம் ஆண்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்பு வீரராக காஞ்சிபுரம் மாவட்டம் , மதுராந்தகம் தீயணைப்பு நிலையத்தில் பணியில் சேர்ந்தார் . பிறகு 2007 – ம் ஆண்டு நாகர்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்திற்கு மாற்றுதலில் பணிபுரிந்து வந்தார்.

பின்பு 2011 – ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று தீயணைப்போர் ஒட்டியாக கன்னியாகுமரி மாவட்டம் , தக்கலை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தில் பணி நியமனம் செய்யப்பட்டார் . இவர் அங்கு பணிபுரிந்த காலத்தில் 2013 – ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி சிலை கரைப்பு நிகழ்ச்சி மண்டைக்காடு வெட்டுமடை கடற்கரையில் நடைபெற்றது . அப்போது , அங்கு பாதுகாப்பு பணியின் போது , கன்னியாகுமரி மாவட்டம் , கண்டன்விளையைச் சார்ந்த ஹரிதாஸ் என்பவர் கடல் அலையில் சிக்கி கடலில் அரை கிலோமீட்டர் அடித்துச் செல்லப்பட்டு , உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்து தீயணைப்போர் ஓட்டி துரைராபின் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கடலில் குதித்து அரை கிலோமீட்டர் கடலில் நீந்திச்சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஹரிதாஸ் என்பவரை உயிருடன் மீட்டு , கடலில் நீந்தி அவரை உயிருடன் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார் அவரின் இந்தப்பணியை பொதுமக்கள் கரகோஷம் எழுப்பி கை தட்டி பாராட்டினார்கள் .
மேலும் 2017 – ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாக்கிய ஓகி புயலில் ஏற்பட்ட வெள்ளத்தில் , நாகர்கோவில் திருப்பதிசாரம் என்ற ஊரில் வெள்ள நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு நபர்களை வெள்ள நீரில் நீந்திச்சென்று காப்பாற்றினார்.

இந்த செயலை கெளரவிக்கும் விதமாக பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை ஆண்டு தோறும் சுதந்திர தினத்தில் அரசு சார்பில் வழங்கப்படும் இந்த ஆண்டு தீயணைப்பு வீரருக்கு சென்னையில் நடைபெற்ற 74 – வது சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வரின் ரூ .10000 / – மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட சிறப்புப்பணி பதக்கத்தை வழங்கி பாராட்டப்பட்டது.
இது ஒட்டு மொத்த தென்மண்டல தீயணைப்புத் துறைக்கு கிடைத்த விருதாக கருதுவதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top